பிகார் மாநிலம் பாட்னாவில் சரக்கு லாரி ஒன்றில் 500 கிலோ கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிகார் ஜீரோ மைலில் இருந்து வந்த சரக்கு லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மறைந்து வைத்திருந்த 589.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் சரக்கு லாரியில் இருந்த அமித் குமார், சஞ்சய் சவுகான், மனோஜ் ரே, சைஸ்தானந்த், பிபின் ரே என்னும் ஐந்து பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஒடிசாவிலிருந்து இந்த கஞ்சாவை பிகாரின் ஹாஜிபூருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
500 கிலோ கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது - கஞ்சா கடத்தல்
பாட்னா: ஒடிசாவிலிருந்து பிகாருக்கு 500 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்த ஐந்து பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) கைது செய்துள்ளது.