இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் உலகம் முழுக்க சுற்றிவந்து சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் இதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கும் நேரத்தில்தான், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள நீச்சல் வீராங்கனை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக அவர் நம் ஈடிவி பாரத் செய்தி குழுமத்திற்கு பிரத்யேகப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “எனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் முதலில் வெளிப்படுத்தப் பயந்தேன். ஒரு நாள் என் தந்தை, நான் பயிற்சிக்குப் போகவில்லை என என்னை அடித்தார். அப்போது தான் எனக்கு நேர்ந்ததை எடுத்துக் கூறினேன்” என்று கூறியுள்ளார். இதனிடையில் இவரின் தந்தை, பயிற்சியாளர் சுராஜித் கங்குலி மீது காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.