கடலூர்: வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் வள்ளலார் முதியோர் காப்பகம் மற்றும் சீறார்கள் இல்லத்தில் சமத்துவ தீபாவளி கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டு, ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற சிறார்களுக்கு, புத்தாடைகள், பட்டாசுப் பெட்டிகள், இனிப்புப் பலகாரம் ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது, மூதாட்டி ஒருவர் புடவை கலர்கள் பிடிக்கவில்லை வேற வேண்டும் என்று கூற எதார்த்தமாக பேசி சிரித்தபடி புடவையை மாற்றி கொடுத்தார். இத்துடன் மனநலம் பாதிக்கப்பட்டு எழுந்து நிற்க கூட முடியாதவர்களின் அருகில் அமர்ந்து, புத்தாடைககள் மற்றும் இனிப்புகளை தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
பார்வையற்ற முதியோருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த போது, “யார் வந்திருக்காங்க என்று ஒருவர் கேட்க, ரஜினி பொண்ணு வந்திருக்காங்க என்று அங்கிருந்தவர்கள் கூற, அதற்கு அவர் அப்படியா ஐஸ்வர்யா, சௌந்தர்யான்னு சொல்லுவாங்களே! அவங்களா வந்திருக்காங்க,” என்று புன்னகைத்தபடி புத்தாடையை வாங்கிக்கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
துறவி ஒருவருக்கு புத்தாடை வழங்கியபோது அவர் இறைவனை வேண்டிக்கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு திருநீறு போட்டுவிட்டார். இதைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்த பெண்ணுக்கு புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து கூறியபோது, அவரது குழந்தை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் கைகுலுக்கி, தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
இதையும் படிங்க |
இறுதியில் ஆதரவற்ற சிறார்களுடன் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆதரவற்றோர் இல்லத்தில் தான் எந்த ஒரு செலிபிரிட்டி அந்தஸ்தையும் காட்டிக்கொள்ளாமல், அனைவரோடும் சகஜமாகப் உரையாடி, இனிப்புகளை வழங்கி தீபாவளிக் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.