ETV Bharat / jagte-raho

2 கோடி ரூபாய் மதிப்புள்ள திருட்டு பொருள்கள் - அதிரடி காட்டிய மும்பை போலீஸ்

author img

By

Published : Jan 16, 2021, 11:39 PM IST

அம்ரோஹா மாவட்டத்தில் சுபோத்நகர் காலனியிலுள்ள எல்.ஐ.சி முகவரின் வீட்டில் மும்பை சிறப்புப் பணிக்குழு சோதனை நடத்தியது. அங்கு கைப்பற்றப்பட்ட திருட்டுப் பொருள்களின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Mumbai STF Uttar Pradesh, Mumbai Special Task Force, Amroha, Moradabad, Mumbai STF raids in Uttar Pradesh, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள திருட்டு பொருட்கள், 2 கோடி ரூபாய் திருட்டு சம்பவம், மும்பை சிறப்புப் பணிக்குழு, எல் ஐ சி முகவர் வீட்டில் 2 கோடி, கொள்ளை சம்பவம், latest crime news in tamil, national crime, mumbai crime, 2 crore theft, 2 crore seized
Mumbai STF recovers stolen goods worth Rs 2 crore from Uttar Pradesh

அம்ரோஹா (உத்திர பிரதேசம்): எல்.ஐ.சி முகவர் வீட்டிலிருந்து மும்பை சிறப்புப் பணிக்குழு அலுவலர்கள் ரூ.2 கோடி மதிப்பிலான திருட்டுப் பொருள்களை மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் போர்வைகள், இரசாயனங்கள், செப்பு-பித்தளை பரிசுப் பொருள்கள், எண்ணெய் பீப்பாய்கள் போன்ற பல பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல் துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து சுபோத்நகர் காலனியிலுள்ள எல்ஐசி முகவர் வீட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு வழக்கில் தொடர்புடைய பாஜக கட்சியின் பிரமுகரையும் தற்போது காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆடுகளை திருடும் தம்பதி; சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

இது குறித்துப் பேசிய உத்திர பிரதேச மாநில அம்ரோஹா காவல் துறை அலுவலர் விஜய் குமார் ராணா, “மும்பை சிறப்புப் பணிக்குழு அலுவலர்கள் (எஸ்.டி.எஃப்) மாநிலத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்தனர். அவர்கள் சோதனைகளை மேற்கொண்டு திருட்டு பொருள்களை மீட்டுச்சென்றனர்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.