தாம்பரத்தையடுத்த சேலையூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் குமார் என்பவரின் மனைவி கல்பனா (34). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை செந்தில் குமார் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டி இருந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கல்பனா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த சேலையூர் காவல் துறையினர், கல்பனாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து அப்பகுதியினரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் பதுக்கிய கூடாரத்தில் தீ விபத்து - மேலும் ஒருவர் உயிரிழப்பு