ETV Bharat / jagte-raho

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 6 குழந்தைகள் படுகாயம்

சேலம்: தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த ஆறு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
author img

By

Published : Sep 4, 2019, 11:48 AM IST

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மல்லிகுந்தம் பகுதியில் அமைந்துள்ள ஆர்.பி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியிலிருந்து குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் மேச்சேரி - பென்னாகரம் செல்லும் வழியில் திப்பரத்தாம்பட்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

அப்போது, வேன் கவிழ்ந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த பள்ளிக் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியே சென்றவர்கள் குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர். இதில் திப்பரத்தாம்பட்டி தருண், சாதனா, சூரியனூர் அழகேசன், மேகா, சஞ்சுநிதா, ஷண்முகப்பிரியா உள்ளிட்ட ஆறு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சாதனா சேலம் நியூரோ மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றுவருவதாகவும்,
மாணவி சண்முகப்பிரியா தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற நான்கு குழந்தைகளும் சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த விபத்து குறித்து மேச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். விபத்துக்குள்ளாகிய ஓட்டுநரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Intro:Body:சேலம் - 03.09.2019

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பள்ளி குழந்தைகள் படுகாயம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மேச்சேரி - பென்னாகரம் செல்லும் வழியில் திப்பரத்தாம்பட்டி என்ற இடத்தில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மல்லிகுந்தம் பகுதியில் R.P மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பள்ளியில் இருந்து வேன் ஒன்று வழக்கம் போல் பள்ளியில் இருந்து குழந்தைகளை ஏற்றுக்கொண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது மாலை 4 மணி அளவில் திப்பரத்தாம்பட்டி பகுதியில் வேன் திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

வேன் கவிழ்ந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த பள்ளிக்குழந்தைகள் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு அந்த வழியே சென்றவர்கள் வேனில் இருந்து குழந்தைகளை கீழே இறங்கி காப்பாற்றியுள்ளனர்.

திப்பரத்தாம்பட்டி தருண், சாதனா, சூரியனூர் அழகேசன், மேகா, சஞ்சுநிதா , ஷண்முகப்பிரியா ஆகிய 6 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளது தெரியவந்திருக்கிறது .

இதில் தலையில் பலத்த காயம் பட்ட சாதனா என்ற பள்ளி குழந்தை மேல் சிகிச்சைக்காக சேலம் நியூரோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார் .

மாணவி சண்முகப்பிரியா தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.Conclusion:மற்றவர்கள் 4 பெரும் சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .விபத்துக்குள்ளாகிய டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.