ETV Bharat / jagte-raho

அண்டை வீடு மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற இளைஞர் கைது

மும்பை :அண்டை வீடு மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்றவைக்க முயற்சித்த இளைஞரை காவலர்கள் கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்தனர்.

Maha man held  Maharashtra news  Malad news  பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு, மும்பை, இளைஞர் கைது, கொலை முயற்சி வழக்கு  Man held for trying to burn down neighbour's house in Maharashtra
Man held for trying to burn down neighbour's house in Maharashtra
author img

By

Published : Mar 6, 2020, 9:56 AM IST

மும்பை புறநகர் பகுதியான மல்வானி பகுதியைச் சேர்ந்தவர் பாப்லோ அயரம் சிங். 25 வயதான சிங், மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் தொழிற்கூடம் நடத்திவருகிறார்.

இவர் ஜிதேந்திர குமார் ஜெய்ஸ்வானியிடம் கடன் பெற்றுள்ளார். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறின்போது, ஜெய்ஸ்வால், சிங்கை தாக்கியதாகத் தெரியவருகிறது.

அப்போது சிங் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை ஜெய்ஸ்வால் தங்கியிருந்த வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயற்சித்தார்.

இது குறித்து ஜெய்ஸ்வால் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் சிங் மீது கொலை முயற்சி (ஐபிசி307) வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: ‘திறமையான மனித வளங்களே உண்மையான வலிமை’ - கட்டுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.