ETV Bharat / jagte-raho

காட்டில் தூக்கில் தொங்கிக் கிடந்த ஆண் சடலம் - காவல் துறையினர் விசாரணை! - குமரி செய்திகள்

குமரி மாவட்டம் தடிக்காரங்கோணம் குட்டிபொத்தை மலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உடலைக் கைபற்றி கீரிப்பாறைக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

man body found hanged in forest
man body found hanged in forest
author img

By

Published : Dec 26, 2020, 7:18 PM IST

கன்னியாகுமரி: குட்டிபொத்தை மலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கியபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்த தடிக்காரன்கோணம் அருகே குட்டிபொத்தை மலையுள்ளது. இந்த பகுதி அழகியபாண்டியபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்டதாகும்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர், நேற்று (டிச., 25) குட்டிபொத்தை மலைக்குச் சென்றுள்ளனர். அப்போது மலையில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்து மலையில் சுற்றி பார்த்துள்ளனர். அப்போது மரம் ஒன்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கியபடி கிடைத்துள்ளது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், இறந்து 4 நாள்கள் ஆகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும், கீரிப்பாறை காவல் துறையினர் சம்பவயிடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

உடலைக் கைப்பற்றிய கீரிப்பாறை காவல் துறையினர், உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.