ETV Bharat / jagte-raho

நள்ளிரவில் வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது! - கன்னியாகுமரியில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் கைது

கொல்லங்கோடு அருகே வீட்டின் மேற்கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்து, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோவை அனைத்து மகளிர் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
author img

By

Published : Dec 8, 2020, 5:34 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நித்திரவிளை சுற்றுவட்டார பகுதி வீடுகளில், வீட்டின் மாடி வழியாக நள்ளிரவில் மர்ம நபர் உள்ளே புகுந்து, வீட்டில் உறங்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தன.

அந்தப் பகுதி மக்கள் நகை பணம் திருடும் நோக்கத்தில் அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகாரளிப்பதோடு இதுகுறித்து பெரிது படுத்தாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி, காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி இன்பசாகரன், தனது ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைத்த வீட்டில், தனது மனைவியுடன் ஒரு அறையில் உறங்கியுள்ளார். அவரது 16 வயதான மகள், 12வயது மகனை பக்கத்து அறையும் தூங்க வைத்துள்ளார்.

அன்றிரவு பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த மகள் அலறும் சத்தம் கேட்டு அங்கு ஓடோடி சென்று பார்த்த போது, அறையிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். இதனைக் கண்ட இன்பசாகரன் அந்நபரை பின்தொடர்ந்து விரட்ட, மர்ம நபர் சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி தப்பி சென்றார்.

ஆட்டோ எண்ணை குறித்து வைத்துக் கொண்ட இன்பசாகரன், அடையாளம் தெரியாத நபர், தன் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அறிந்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஆட்டோ எண்ணுடன் புகாரளித்தார்.

புகாரின் பேரில் காவலர்கள் நடத்திய விசாரணையில், அச்சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த 40 வயதான ஆட்டோ டிரைவர் சுரேஷ்பாபு என்பது தெரிய வந்தது.

அவரை கைது செய்ய காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். சுரேஷ்பாபு நேற்று நித்திரவிளை பகுதியில் வீடுகளை வேவு பார்த்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பல பெண்களுடன் தகாத பாலியல் உறவு வைத்திருப்பதும், பகல் வேளையில் டிப்-டாப்பான ஆட்டோ டிரைவராக வலம் வரும் இவர், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து அயர்ந்து தூங்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சைக்கோவாக வலம் வந்ததும் தெரியவந்தது. இவர் மீது பெண்கள் தொடர்பாக வழக்குகளும், அடிதடி வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சுரேஷ்பாபுமீது வழக்கு பதிவுந்து, கைது செய்த குளச்சல் அனைத்து மகளிர் காவல்துறையினர், நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கேட்டு கொலை செய்த கணவனுக்கு 19 ஆண்டு சிறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.