ETV Bharat / jagte-raho

கஞ்சா மூட்டைகளுடன் பிரபல ரவுடியின் கூட்டாளி கைது - வெள்ளை காளி கூட்டாளி கைது

மதுரை: பிரபல ரவுடியின் கூட்டாளி ஒருவர் கஞ்சா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய மேலும் ஐந்து நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Rogue gang member arrested with cannabis bag
பிரபல ரவுடியின் கூட்டாளி கஞ்சா மூட்டைகளுடன் கைது
author img

By

Published : Sep 29, 2020, 8:48 AM IST

மதுரை மாநகரில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி வெள்ளை காளியை கடந்த வாரம் காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளை காளியின் கூட்டாளியான கார்த்திக் என்ற அகோர கார்த்திக் தலைமறைவாக இருந்து வந்தார்.

மதுரை கீரைத்துறை மின் மயானம் அருகே உள்ள குப்பை மேட்டில் கஞ்சா மூட்டையுடன் கார்த்திக் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சுற்றி வளைத்து பிடித்த காவல் துறையினர், அவரிடமிருந்து 30 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Rogue gang member arrested with cannabis bag
கஞ்சா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட வெள்ளை காளி கூட்டாளி கார்த்திக்

மேலும் கார்த்திக்கை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது கார்த்திக்குடன் கஞ்சா விற்பனைக்கு உறுதுணையாக மேலும் 5 நபர்கள் இருப்பது தெரியவந்த நிலையில், காவல் துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்களை ஏமாற்றிய வழக்கு: கன்னியாகுமரி காசியின் நண்பரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.