மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் அருகேயுள்ள ராஜீப் நகரைச் சேர்ந்த கோவிந்த் சோலங்கி, தனது மனைவி ஷர்தா, மகள் திவ்யாவுடன் வசித்துவந்தார். இவர்கள் மூவரும் கடந்த மாதம் 25ஆம் தேதி வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களைச் சரமாரியாகத் தாக்கி கொலைசெய்தனர்.
இதனையடுத்து இந்த மூவர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இதில் முக்கியக் குற்றவாளி திலீப் தேவாலின் கூட்டாளிகள் மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில் நேற்று (டிச. 03) முக்கிய குற்றவாளி திலீப் தேவால் இருக்கும் இடம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த காவல் துறையினர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது, திலீப் தேவால் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதற்குப் பதிலடியாக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளி திலீப் தேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், மூன்று காவல் துறையினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
திலீப் தேவால் ஏற்கனவே கஸ்தூர்பா நகரைச் சேர்ந்த பெண் மருத்துவரைக் கொலைசெய்த வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...அரபு நாடுகளுக்குச் செல்ல இருக்கும் ராணுவத் தளபதி முகுந்த் நரவணே!