தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (23). இவர் பட்டியிலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்நிலையில் இவர் தனது வீட்டு வாசலில் கால் மேல், கால் போட்டு, அமர்ந்து பாட்டு கேட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மாற்று வகுப்பைச் சார்ந்த கண்ணன்( 40) என்பவர் மது போதையில் அவரிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் "என் முன்னால், கால் மேல், கால் போட்டு எப்படி பாட்டு கேட்கலாம்" என்று ஆத்திரத்துடன் பேசிய கண்ணன், தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து சுந்தரின் தலையில் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே சரிந்த சுந்தரை அப்பகுதி மக்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை தாக்கிய கண்ணன் தலைமறைவாகி விட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க:
ரூ.200 திருடியதாகச் சிறுமிக்கு சூடு: அரசு அலுவலர் மீது வழக்குப்பதிவு