பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமாந்துறை கிராமத்தில் சென்னை - திருச்சி செல்லும் சாலையில் கடந்த 23.08.19ஆம் தேதி TN 52 J3367 என்ற பதிவுஎண் கொண்ட சிமெண்ட் லாரியின் ஒட்டுநர் ஜீவரத்தினம் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு லாரியை சிமெண்ட் லோடுடன் கடத்திச்சென்று விட்டனர்.
இதுகுறித்து லாரி ஒட்டுநர் ஜீவரத்தினம் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா உள்ளிட்ட ஏழு குற்றவாளிகளையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், குற்றவாளிகள் கடத்திச்சென்ற சிமெண்ட் லாரி அதிலிருந்த 520 சிமெண்ட் மூட்டைகளையும் காவல் துறையினர் மீட்டனர். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.