ETV Bharat / jagte-raho

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு: மேலும் மூவரிடம் ரகசிய விசாரணை - Further investigations are underway by the police

திருவாரூர்: லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்ற சுரேஷின் உறவினர்கள் மூவரை காவல் துறையினர் கைது செய்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் மூவரிடம் காவல்துறையினர் ரகசிய விசாரணை
author img

By

Published : Oct 4, 2019, 12:14 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி கடையின் பின்புற சுவரை துளையிட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தற்போது கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு திருச்சி காவல் துறையினர் சார்பில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சீராதோப்பு சுரேஷ், மடப்புரம் மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை கண்டவுடன் தப்பியோட முயற்சித்தனர். இதில் சுரேஷ் என்பவர் தப்பியோடிய நிலையில் மணிகண்டனை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவரை சோதனையிட்ட காவல் துறையினர் அவரிடமிருந்து நான்கு கிலோ 800 கிராம் அளவுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த நகைகளில் லலிதா ஜுவல்லரியின் இலச்சினை (எம்பளம்) பொறிக்கப்பட்டிருந்ததால் இவை அங்கு திருடிய நகைகள் என உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேல் விசாரணைக்காக மணிகண்டனை காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் நேற்றிரவு திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.

திருவாரூர் காவல் நிலையம்

தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் திருவாரூர் முழுவதும் தப்பியோடிய குற்றவாளியை கண்டுபிடிக்க சுரேஷின் உறவினர்கள் ரவி, மாரியப்பன், குணா உள்ளிட்டவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான திருவாரூரைச் சேர்ந்த முருகன் என்பவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படியுங்க:

லலிதா நகைக்கடையில் திருடியவர் கைது..

Intro:Body:லலிதா நகைக்கடை கொள்ளையில், திருவாரூர் போலீஸாரிடம் தப்பிய சுரேஷ் உறவினர்கள் 3 பேரை போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா
ஜுவல்லரி கடையின் பின்புற சுவரை துளையிட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள
நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி
காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு திருச்சி காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து
கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூர் மாவட்டம்
மடப்புரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சீரா சுரேஷ் மற்றும் மடப்புரம்
மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டவுடன்
தப்பி ஓட முயற்சித்தனர். இதில் சுரேஷ் என்பவர் தப்பி ஓடிய நிலையில்
மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை சோதனையிட்டதில் 4 கிலோ 800 கிராம் நகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நகைகளில் லலிதா
ஜுவல்லரியின் எம்பளம் பொரித்திருந்ததால் அங்கு திருடிய நகைகள் என உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மேல் விசாரணைக்காக திருச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணிகண்டன் இரவு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து தனிப்படை போலீசார்
திருவாரூர் முழுவதும் தப்பிய குற்றவாளியை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் திருவாரூர் சீராதோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷின் உறவினர்கள் ரவி ,மாரியப்பன், குணா உள்ளிட்டவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக திருவாரூரை சேர்ந்த முருகன் என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.இவர் பல்வேறு மாநிலத்தில் ஏடிஎம் மற்றும் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடதக்கது. எனவே முருகன் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டிருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரணை தீவிர படுத்தப்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.