கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மகேஷ் என்பவர் டீத்தூள் மொத்த வியாபாரம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி மகேஷுக்கு தெரிந்த நான்கு நபர்கள், கடையினுள் புகுந்து மகேஷை தாக்கியதுடன் கடையில் இருந்த 6 லட்சத்து 49 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு, கையொப்பமிட்ட காசோலைகள், 2 செல்போன்கள் போன்றவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், 35 கிலோ டீத்தூள் பாக்கெட்டுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அவர் காவல்துறையிடம் புகார் அளிக்காதநிலையில் ஊட்டி சென்றுள்ளார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டதால் நேற்று அவர் ஆன்லைன் மூலம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்தப் புகாரின் பேரில், ரத்தினபுரி காவல் துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட அருண்பிரகாஷ், சதீஷ், இளங்கோவன், கண்ணன் ஆகிய நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.