ETV Bharat / jagte-raho

கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் பெயிலுக்கு நோ சொன்ன நீதிமன்றம்! - kerala gold smuggling case

உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலைச் சீர்குலைக்கும் வகையில் பெரும் அச்சுறுத்தல் தரும் குற்றத்தை ஸ்வப்னா சுரேஷ் செய்துள்ளார் என்பதைக் கிடைத்த தடயங்கள் தெளிவுப்படுத்துவதாக உயர் நீதிமன்றத்தில் சுங்கத் துறை தெரிவித்திருந்தது. அதேபோல என்ஐஏ அலுவலர்களும் இன்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வாதத்தை முன்வைத்தனர். தொடர்ந்து நீதிமன்றம் ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரளா தங்க நகைக் கடத்தல், kerala gold smuggling case
கேரளா தங்க நகைக் கடத்தல்
author img

By

Published : Aug 10, 2020, 5:23 PM IST

Updated : Aug 10, 2020, 7:49 PM IST

எர்ணாகுளம்: தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள அரசின் உயர் பதவி வகித்த ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனுவை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்த வழக்கு விசாரணை ஆவணங்கள், வாதங்கள் ஆகியவற்றை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் நடந்த ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. அன்று நடந்த விசாரணையில், ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் கோரிக்கையை எதிர்த்து வாதிட்ட என்ஐஏ, ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சரின் முதன்மைச் செயலராக இருந்த எம். சிவசங்கர் மூலம் முதலமைச்சர் அலுவலகத்துடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தது.

ஸ்வப்னா வங்கி லாக்கரிலிருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும், 982.5 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளையும் என்ஐஏ அலுவலர்கள் கைப்பற்றினர். இவ்வேளையில் இன்று (ஆகஸ்ட் 10) நடந்த ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, அவருக்கு எதிராக என்ஐஏ அலுவலர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். மேலும், விசாரணை குறித்த ஆவணங்களையும் சமர்பித்தனர், அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, ஜூலை மாதம் 5ஆம் தேதி வந்த சரக்குப் பெட்டிகளில் 30 கிலோ கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இவ்வழக்கை என்ஐஏ எடுத்துக்கொண்டது.

இதையடுத்து, இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் மேலாளராகப் பணிபுரிந்துவந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உள்பட 12 பேரை என்ஐஏ அலுவலர்கள் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இச்சூழலில், தற்போது அமலாக்கத் துறை முதற்கட்டமாக, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அவர்களைக் காவலில் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஸ்வப்னா சுரேஷ் நாட்டிற்கு அச்சுறுத்தலான குற்றவாளி; அதை தடையங்கள் தெளிவுப்படுத்துகிறது: சுங்கத் துறை

Last Updated : Aug 10, 2020, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.