கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் சிறுமி அழுதுகொண்டே தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
தொடர்ந்து மாலை வேலைக்கு சென்று திரும்பி வந்த சிறுமியின் தந்தையிடம் இது குறித்து அவரின் பக்கத்து வீட்டுக்காரர் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை அவரது தந்தை மேல்நாரியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார். பின்னர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து சிறுமியின் தந்தை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த டெம்போ டிரைவர் பழனிச்சாமியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதையும் படிங்க...தாம்பரம், செல்போன் திருடிய இளைஞர் கைது!