சென்னை பெரம்பூர் சின்னையா நியூ காலனியைச் சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி சக்தி கிரிஜாஸ்ரீ (30). இவர் நடனப்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து, கடந்த 30ஆம் தேதி, மாதவரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சக்தி கிரிஜா ஸ்ரீ குடும்பத்துடன் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று (செப். 2) காலை வீட்டுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில், வைக்கப்பட்டிருந்து 12 சவரன் தங்க நகைகள், வீட்டில் இருந்த 3 லேப்டாப் மற்றும் 3 செல்போன்கள் காணாமல் போயுள்ளது. கொள்ளை தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில், சக்தி கிரிஜாஸ்ரீ புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 இடங்களில் மூவரிடம் வழிப்பறி: இருவர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு!