ETV Bharat / jagte-raho

ஐபிஎஸ் அலுவலர் மீது மனைவி வன்கொடுமை புகார்! - மனைவி

சென்னை: வன்கொடுமை செய்த கணவர் மீது நீதிமன்ற உத்தரவு இருந்தும் வழக்குப் பதிய காவல் துறையினர் மறுப்பதாகவும், இதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அலுவலர் மனைவி தெரிவித்துள்ளார்.

officer
officer
author img

By

Published : Jan 25, 2020, 8:25 PM IST

Updated : Jan 25, 2020, 10:26 PM IST

தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஐபிஎஸ் அலுவலராக கேரளாவில் பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்காக பெண் வீட்டாரிடமிருந்து 500 சவரன் நகையுடன் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வரதட்சணை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், ஆனந்திற்கு கேரளாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவி அருணாவை, ஆனந்த், அவரது தாய் மலர்கொடி இருவரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அருணா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், கடந்தாண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கைத் திரும்பப் பெறுமாறு ஆனந்த் தன்னை மிரட்டுவதாக அருணா காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

கணவர் ஆனந்துடன் அருணா
கணவர் ஆனந்துடன் அருணா

இந்நிலையில், இன்று தேனாம்பேட்டை காவல் நிலையம் வந்த அருணா, நீதிமன்ற நகலை கொடுத்து ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினர் மறுப்பதாக அருணா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎஸ் அலுவலர் என்பதால் அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தன்மீது வழக்குப் பதியாமல் காப்பாற்றிக் கொள்வதாகவும், நீதிமன்ற உத்தரவு இருந்தும் வழக்குப் பதிய காவல் துறையினர் மறுப்பதாகவும் கூறினார். இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் அருணா தெரிவித்தார்.

ஐ.பி.எஸ் அதிகாரி மீது மனைவி வன்கொடுமை புகார்

இவ்விவகாரத்தில் அருணாவுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினரும் காவல் துறையினரிடம் பேசினர். ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த் மீது காவல் துறை இரண்டு நாள்களில் வழக்குப் பதியவில்லை என்றால், தேனாம்பேட்டை காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிடுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் !

Intro:Body:வன் கொடுமை சட்டத்திற்கு கீழ் ஐ.பி.எஸ் அதிகாரி மேல் புகார் எடுக்க காவல் துறை மறுப்பு - மாதர் சங்கம் ஆர்பாட்டம் அறிவிப்பு.

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையை சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக கேரளாவில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்காக பெண் வீட்டார் தரப்பில் இருந்து சுமார் 500 சவரன் நகை மற்றும் சுமார் 4கோடி ரூபாய் அளவுக்கு வரதட்சணை கொடுக்கபட்டதாக கூறபடுகிறது. 2 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில்
ஆனந்த் ஐபிஎஸ் பயிற்சி முடிந்து கேரளாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் போது வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் அவரது மனைவி காஞ்சனாவை ஆனந்தும் அவரது தாயும் மலர்கொடியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும், வன்கொடுமையும் செய்து வந்துள்ளனர்.

மேலும் தனது தந்தையின் சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக கஞ்சனா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத்தால் அவர் நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் அதிகாரி ஆனந்த் வாபஸ் பெறுமாறு தன்னை மிரட்டுவதாகவும், ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கஞ்சானா ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நீதிமன்றம் உத்திரவு நகலை கொடுத்து வழக்கை பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் காவல் துறை தகுந்த ஆதாரங்கள் கொண்டு வருமாறு கூறி வழக்கு பதிய மறுக்கின்றனர் என குற்றம்சாட்டுகிறார் காஞ்சனா.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சனா, ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தன் மீது வழக்கு பதியாமல் காப்பாற்றி கொள்கிறார். நீதிமன்றம் உத்திரவு இருந்தும் வழக்கு பதிய காவல் துறை மறுக்கின்றனர். இதை எதிர்த்து நான் மீண்டும் நீதிமன்றம் செல்ல உள்ளேன் என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மாதர் சங்கம் பெண்ணுக்கு ஆதரவாக காவல் துறையில் பேசியுள்ளது. காவல் துறை இரண்டு நாட்களில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் தேனாம்பேட்டை காவல் நிலையத்தை புதன்கிழமை அன்று முற்றுகை இடுவோம் என எச்சரித்தனர்.Conclusion:
Last Updated : Jan 25, 2020, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.