ETV Bharat / jagte-raho

திருச்சியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை! - பெண் தற்கொலை

திருச்சி: சிறுகனூர் அருகே கணவர் இழந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி தீக்குளித்து தற்கொலை
author img

By

Published : Aug 13, 2019, 9:54 PM IST

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் முத்துச்செல்வன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இளம் வயதில் கணவனை இழந்து மிக துயரத்தில் இருந்த பிரியாவிற்கு உறவினர்கள் ஆறுதலாக இருந்துவந்தனர். அதனால் குழந்தைகளை வைத்துகொண்டு சிறுது காலம் கவலைகள் மறந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரியா நேற்று மாலை தன் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அவரின் கணவன் உடல் அடக்கம் செய்த மயானத்திற்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததால் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார், இதனால் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

wife set ablaze
தற்கொலை செய்து கொண்ட பிரியா

தகவல் அறிந்து சிறுகனூர் காவல் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தாயின் உடலை பார்த்து மூன்று குழந்தைகளும் கதறி அழுத சம்பவம் கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Intro:திருச்சி அருகே கணவர் இழந்த விரக்தியில் 3 குழந்தைகளில் தாய் சுடுகாட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Body:திருச்சி:

திருச்சி அருகே கணவர் இழந்த விரக்தியில் 3 குழந்தைகளில் தாய் சுடுகாட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் முத்துச் செல்வன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இளம் வயதில் கணவனை இழந்த பிரியா மிக துயரமடைந்தார். 3 குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது? என்று மன வேதனை அடைந்தார். கணவர் சென்ற இடத்திற்கே நானும் செல்லப்போகிறேன் என்று அழுது புலம்பிய பிரியாவுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

எனினும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரியா நேற்று மாலை 3 குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கணவரின் உடலை அடக்கம் செய்த மயானத்திற்கு சென்றார். அங்கு தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சுடுகாட்டில் யாரும் இல்லாததால் தீயில் முற்றிலும் கருகி உயிரிழந்தார். பெண் உடல் தீப்பற்றி எரிவதை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயின் உடலை பார்த்து 3 குழந்தைகளும் கதறி அழுதனர்.
தந்தையை தொடர்ந்து தாயையும் இழந்துள்ள 3 குழந்தைகளின் பரிதாப நிலை அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Conclusion:தந்தையை தொடர்ந்து தாயையும் இழந்துள்ள 3 குழந்தைகளின் பரிதாப நிலை அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.