சமீப காலமாகவே சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வந்தது. இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த நிலையில், இதனைக் கண்ட போலீசார் கஞ்சாவை ஒழிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நல்லத் தம்பி சாலையில் ஓரத்தில் 4அடி உயரம் உள்ள கஞ்சா செடி அமோகமாக வளர்ந்து வருகின்றது. அதுமட்டுமின்றி பம்மல் சங்கர்நகர் காவல் நிலையத்திற்கு அருகாமையில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி மரம் போல் வளர்ந்து இருக்கிறது.
அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் கஞ்சா வாசனையை முகர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த சங்கர் நகர் காவல் துறையினர், இரண்டு இடங்களிலும் இருந்த கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி பறிமுதல் செய்தனர்.
பம்மல் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கஞ்சா செடிகளை வளர்த்து வருபவர்கள் யார் விற்பனைக்காக வளர்த்து வந்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...SBI நகை மதிப்பீட்டாளருக்கான தொகை நிர்ணய அறிவிப்பிற்கு தடை!