ETV Bharat / jagte-raho

ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை:  11 பேராசிரியர்களிடம் விசாரணை - ஐஐடி கேரள மாணவி தற்கொலை

சென்னை: ஐஐடி கல்லூரியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக கேரள முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

kerala student death
author img

By

Published : Nov 13, 2019, 6:15 PM IST

Updated : Nov 16, 2019, 1:28 PM IST

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூரைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (18). இவர் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை அறிவியல் பிரிவில் மனிதநேயம் (MA Humanities) என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். ஐஐடி வளாக சரவியூ விடுதியில் அறை எண் 349இல் தங்கியிருந்தார்.

நவம்பர் 8ஆம் தேதி இரவு தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இறப்புக் கடிதம்
இறப்புக் கடிதம்

இந்நிலையில், பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், "தனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தனது முதல் மகள் பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் சேர்ந்து நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, பட்டப்படிப்பு மேற்கொண்டுவந்தார்.

இந்நிலையில், நவம்பர் 9ஆம் தேதி பெண் கல்லூரி விடுதியின் அறையில் தூக்கிட்டுத் இறந்ததாகத் தகவல் வந்தது. இதனால், எனது மனைவி சென்னை சென்று, மகளின் உடலை வாங்கச் சென்றார். பின்னர், இது தொடர்பாக எனது நண்பர் கொல்லம் மேயர் ராஜேந்திர பாபுவுடன், சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்தோம்.

இது குறித்து எனது மகளின் செல்ஃபோனை ஆராயும்போது , அதில், 'எனது சாவுக்குக் காரணம் ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் காரா, மிலின் பிராமே ஆகியோர்தான்' என்று இறப்பதற்கு முன்னதாக குறிப்பிட்டுவிட்டு இறந்துள்ளார். கல்லூரி கேண்டீனில் அவளது நண்பருடன் 9.30 மணியளவில் பேசி அழுதுள்ளதாகவும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மாணவியின் கடைசி வாக்குமூலம்
மாணவியின் கடைசி வாக்குமூலம்

ஆனால், கோட்டூர்புரம் காவல் துறையினர் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து அந்த மனுவை உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோரிடம் இந்த வழக்கை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஐஐடியில் உள்ள 11 பேராசிரியர்களிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை இளம்பெண் விபத்து: அவசர வழக்காக விசாரிக்க டிராஃபிக் ராமசாமி மனு!

Intro:Body:*ஐஐடியில் கேரள மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.*

தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தமிழக முதலமைச்சருக்கு தந்தை மனு..

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூர் ஊரைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப் (18) இவர் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு MA humanities என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் ஐ.ஐ.டி வளாக சரவியூ விடுதியில் அறை எண் 349 ல் தங்கி வந்துள்ளார்.கடந்த 8ஆம் தேதி இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கோட்டூர்புரம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் பாத்திமா லத்திப்பின் தந்தை அப்துல் லத்திப் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் தனக்கு மூன்று மகள்கள் உள்ளதாகவும், முதல் மகள் பாத்திமா லத்திப் என்றும் சென்னை ஐஐடியில் சேர்ந்து நுழைவு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று பட்டப்படிப்பு மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி தனது பெண் கல்லூரி விடுதியின் அறையில் தூக்கிட்டு இறந்ததாக தகவல் வந்தது.இதனால் தனது மனைவி சென்னை வந்து தனது மகளின் பிரேதத்தை கைப்பற்றி சென்றனர்.

பின்னர் இது தொடர்பாக எனது நண்பர் கொல்லம் மேயர் ராஜேந்திர பாபு உடன் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு சென்று விசாரிக்கும் போது தனது மகளின் செல்போனை ஆராயும் போது அதில் தனது சாவுக்கு காரணம் ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன்,ஹெமசந்திரன் காரா மற்றும் மிலின் பிராமே ஆகியோர் தான் என்று இறப்பதற்கு முன்னதாக செல்போனில் குறிப்பிட்டு இறந்துள்ளார்.மேலும் கல்லூரி கேண்டினில் அவளது நண்பருடன் 9அரை மணியளவில் பேசி அழுதுள்ளதாகவும் சிசிடிவியில் பதிவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பின்னர் கோட்டூர்புரம் போலிசார் சரியான முறையில் நடவடிக்க எடுக்கவில்லை எனவும்,உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் அந்த மனுவை உடனடியாக தமிழக முதலமைச்சர்,தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதநுக்கு இந்த வழக்கை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெயில் மூலம் அப்துல் லத்தீப் அனுப்பியுள்ளார்..

குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஐஐடியில் உள்ள 11 பேராசிரியர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..

மேலும் இது தொடர்பாக அப்துல் லத்தீபிடம் கேட்டபோது தனது மகள் மரணம் தொடர்பாக நாளை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Conclusion:
Last Updated : Nov 16, 2019, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.