ETV Bharat / jagte-raho

மனைவியின் திருமணம் மீறிய உறவால் கணவர் தற்கொலை - திருப்பூரில் மனைவியின் திருமணம் மீறிய உறவால் கணவர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்: தாராபுரம் அருகே மனைவியின் திருமணம் மீறிய உறவால் மனமுடைந்த கணவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide
author img

By

Published : Feb 11, 2020, 6:28 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்பவர் சுதா (34). இவரது கணவர் வேலுச்சாமி (49), கார் ஓட்டுநராக பணியாற்றிவந்தார். இவர்களுக்கு சுவேதா என்ற மகளும், அகில் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், மாம்பாடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சுரேஷ் என்பவருடன் சுதா நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த வேலுச்சாமி, தனது மனைவியிடம் பலமுறை எச்சரித்தார். இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிபி கார்டனில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகளுடன் சுதா வசித்து வந்துள்ளார். இதனிடையே, சுரேஷ் - சுதா அடிக்கடி சந்தித்து பேசுவதை பார்த்த சிலர், இதுகுறித்து வேலுச்சாமியிடம் விசாரித்தனர்.

இதனால் மனமுடைந்த வேலுச்சாமி, நேற்று முன்தினம் (பிப். 09) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்த தாராபுரம் காவல் துறையினர், வேலுச்சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

suicide

அதைத் தொடர்ந்து, வேலுச்சாமி எழுதிய கடிதம் ஒன்றை காவல் துறையினர் கண்டறிந்தனர். அதில், தனது சாவுக்கு மாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்தான் காரணம் என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், சுதாவுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் - தந்தை நாடகம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்

Intro:மனைவியின் கள்ளக் காதலால் கணவர் தூக்கிட்டு தற்கொலை. கிராம நிர்வாக அலுவலர் கைது.
Body:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்பவர் சுதா34 இவரது கணவர் வேலுச்சாமி வயது 49 தனியார் கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார் காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு சுவேதா என்ற மகளும் அகில் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுதா மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் சுரேஷ்40 என்பவரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார் இது குறித்து அறிந்த வேலுச்சாமி தனது மனைவியிடம் பல முறை எச்சரித்தும் தொடர்ந்து சுரேஷிடம் பழகி வந்துள்ளார் இதனால் இருவருக்கும் அப்பொழுது பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதனையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து பூங்கா அருகே சிபி கார்டனில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். வேலுச்சாமி உப்புத்துறை பாளையத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். சுதா வேலுச்சாமி யுடன் இல்லாமல் தனியே வசிப்பதும் சுரேஷ் என்பவருடன் அடிக்கடி சந்தித்து பேசுவதையும் கண்ட சிலர் வேலுச்சாமி இடம் விசாரித்துள்ளனர் இதனால் அவமானம் தாங்க முடியாத வேலுச்சாமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு சென்றுள்ளார் காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து உள்ளே பார்த்தபோது வேலுச்சாமி சேலையில் தூக்கிட்டு தொங்கிய படி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தாராபுரம் போலீசார் வேலுச்சாமியின் சடலத்தை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வேலுச்சாமியின் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றைக் கண்டறிந்தனர் அந்த கடிதத்தில் தனது சாவுக்கு மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் என்பவர் தான் காரணம் என்று எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுரேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் சுதாவுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தாராபுரம் போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.