ETV Bharat / jagte-raho

திருமணத்தை மீறிய உறவு: மனைவி கண்முன்னே கணவனை துவைத்தெடுத்த காதலன்! - kanyakumari crime

சரவணனிடம் தனது மனைவியுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளுமாறு பார்த்திபன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணன் தனது நண்பருடன் சேர்ந்து பார்த்திபன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

நாகர்கோவில் கள்ளக்காதல்
நாகர்கோவில் கள்ளக்காதல்
author img

By

Published : Sep 6, 2020, 3:07 PM IST

கன்னியாகுமரி: தட்டிக் கேட்ட கணவரை மனைவி கண்முன்பே கொலைவெறி தாக்குதல் நடத்தும் காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வாத்தியார்விளை, மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (29). இவரது மனைவி ராசாத்தி(26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(25) என்பவருடன் நெருங்கி பழகிவந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஒன்பது மாதங்களாக பார்த்திபன் தனது மனைவி ராசாத்தியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இச்சூழலில் இன்று (செப்டம்பர் 6) சரவணனிடம் தனது மனைவியுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளுமாறு பார்த்திபன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணனும், அவரது நண்பர் மிக்கேல் (28 )ஆகிய இருவரும் சேர்ந்து மனைவி ராசாத்தி கண்முன்பே பார்த்திபனை இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மனைவி கண்முன்னே கணவனை அடித்த காதலன்

இதில், படுகாயமடைந்த பார்த்திபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பார்த்திபன் தற்போது சுயநினைவின்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், மனைவி ராசாத்தி முன்னிலையில் பார்த்திபன் தாக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து மாவட்ட தலைநகரில் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. இதைத் தொடர்ந்து வடசேரி காவல் துறையினர் சரவணன், மிக்கேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.