ETV Bharat / jagte-raho

மகளுக்கு வினையான தாயின் இரண்டாவது கணவர் - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! - madurai crime news

தாயின் இரண்டாவது கணவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 13 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியை எச்.ஐ.வி தொற்று பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

hiv infected cruel step father sexually assaulted daughter

author img

By

Published : Jan 29, 2021, 6:34 AM IST

மதுரை: தாயின் இரண்டாவது கணவரால் மகள் கர்ப்பமாகி, பின் எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கணவரை இழந்த பெண் ஒருவரை 50 வயதுடைய நபர் திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவரான 13 வயதான சிறுமியை அந்த நபர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்தார். இது தொடர்பாக தனது கணவரைச் சிறுமியின் தாய் பலமுறை கண்டித்தார்.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பாக அச்சிறுமி வீட்டில் மயங்கிக் கிடந்தார். மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அச்சிறுமி கர்ப்பமுற்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, குழந்தைகள் நலக் குழுவினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த சிறுமியிடம் பலமுறை தாயின் இரண்டாவது கணவர் அத்துமீறி இருப்பதும், கர்ப்பத்திற்கு அவர்தான் காரணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டிய ராஜா அளித்த புகாரின் பேரில், கல்லுப்பட்டி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதற்கிடையே அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமிக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில், அந்த சிறுமிக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவர் ஆகிய இருவருக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பதும், அவர்கள் அதற்குச் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களிடத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.