ETV Bharat / jagte-raho

இந்து முன்னணி, பாஜக இடையே மோதல் - 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

கோவை : கோவையை அடுத்துள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தலைமறைவான பாஜக நிர்வாகியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hindu Front - BJP clash: 3 people cut sickle
இந்து முன்னணி - பாஜக இடையே வெடித்த மோதல் :3 பேருக்கு அரிவாள் வெட்டு!
author img

By

Published : Mar 3, 2020, 8:35 AM IST

கவுண்டம்பாளையத்தில், இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டதை அடுத்து, இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, கார் ஓட்டி வந்த நபரும் இரு சக்கர வாகனம் வந்த பெண்ணும் தங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்காக அவரவர் தரப்பிலிருந்து தங்களது நண்பர்களை அழைத்துள்ளனர்.

விபத்து நடத்த இடத்திற்கு வந்த இருதரப்பு ஆட்களும் பேச, அது கடும் வாக்குவாதமாக முற்றி இறுதியில் மோதலாக மாறியது. இந்த மோதலின் போது பெண் சார்பில் வந்த பாஜகவை சேர்ந்த அசோக் தரப்பினர், இந்து முன்னணியை சேர்ந்த கார்த்திக் தரப்பினரை அரிவாளால் தாக்கியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த மோதல் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதை அறிந்த பாஜக நிர்வாகி அசோக், அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், படுகாயம் அடைந்த 3 பேரையும் காவல்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த துடியலூர் காவல்துறையினர், இந்து முன்னணி நிர்வாகிகளை அரிவாளால் வெட்டிய பாஜக இளைஞர் அணி நிர்வாகி அசோக், ராசு, சண்முக சுந்தரம், சச்சு உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைதுச் செய்த துடியலூர் காவல்துறையினர், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் இருதரப்புக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்து முன்னணி - பாஜக இடையே வெடித்த மோதல் :3 பேருக்கு அரிவாள் வெட்டு!

இதையும் படிங்க : 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.