ETV Bharat / jagte-raho

தென் மாவட்டங்களுக்கு லாரி சர்வீஸ் மூலம் குட்கா விநியோகம் - அதிர்ச்சி தகவல் - 5 tonnes of gutka seized in madurai

மதுரை : இரண்டு லாரிகளில் ஐந்து டன் குட்கா போதைப்பொருள்களை பதுக்கி வைத்திருந்த இருவரை மதுரை மாநகர காவல்துறையினர் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்கா பறிமுதல் - இருவர் கைது!

author img

By

Published : Oct 3, 2020, 9:43 PM IST

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா போதைப் பொருள்கள் பல்வேறு வகையில் மதுரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார் வந்துக்கொண்டே இருந்திருந்துள்ளன.

இதனைக் கட்டுப்படுத்த மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதுரை காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் ரகசியக் குழுக்கள் உருவாக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்துள்ள ரயில் நிலைய பார்சல் சர்வீஸ் அருகில் குட்கா போதைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளை சோதனை செய்தனர்.

அந்தச் சோதனையில், இரண்டு லாரிகளிலும் குட்கா போதைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியபட்டது. அங்கிருந்த லாரி ஓட்டுனரை கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குட்கா போதைப் பொருள்கள் சுமார் ஐந்து டன் எடை கொண்டது என்றும் ரூ.25 லட்சம் மதிப்பிலானது என்றும் தெரியவந்தது.

மேலும் , இந்த குட்கா போதைப் பொருள்களை கார்த்திக் தீபக் என்ற நபர் பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்துள்ளதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினரின் இந்தச் சோதனை குறித்து தகவலறிந்த தீபக் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

தென் மாவட்டங்களுக்கு லாரி சர்வீஸ் மூலம் குட்கா புகையிலை பொருள்களை அனுப்பியதாக இர்பான் லாரி சர்வீஸ் மற்றும் செல்வி லாரி சர்வீஸ் ஊழியர்களைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், மேல அனுப்பானடியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் லாரிகளை காவல்துறை இணை ஆணையர் சிவபிரசாத் நேரில் பார்வையிட்டார்.

மதுரையில் ஒரே நாளில் 5 டன் குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.