திருவள்ளூர்: அடிதடி, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் மணவாள நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் வெங்கடேசன் (25). இவரை சில தினங்களுக்கு முன் வழிப்பறி வழக்கில் மணவாளநகர் காவல் துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதியப்பட்டது.
இவர் மீது கஞ்சா கடத்தல், அடிதடி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து வெங்கடேசனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து வெங்கடேசனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார். இதற்கான நகலை மணவாளநகர் காவல் துறையினர் புழல் சிறை கண்காணி்பபாளரிடம் ஒப்படைத்தனர்.