சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புளுதிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன், ராதிகா தம்பதியினர். இவர்களுக்கு ஹரிபிரசாத் என்ற மூன்று வயது மகன் உள்ளார். சிறுவன் ஹரிபிரசாத்தை தினமும் வீட்டிற்கு அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டட பகுதியில் விளையாடச் செய்வது வழக்கம்.
இதேபோல், கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஹரிபிரசாத் ஊராட்சி மன்ற கட்டடம் அருகே சென்று அங்கு உள்ள இரும்பு கேட்டில் ஏறி விளையாடினான். அப்போது, இரும்பு கேட்சரிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில், சிறுவன் தலையில் பலத்த காயமடைந்து சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
அங்கே சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி 45 நாட்களுக்கு பின்னர் சிறுவன் ஹரிபிரசாத் இன்று அதிகாலை உயிரிழந்தான். இதையடுத்து, சிறுவன் ஹரிபிரசாத் உடல் உடற்கூறாய்வு செய்யவதற்காக பிணக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் திரளாக மருத்துவமனைக்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பேனர் கடையில் சிறுவர்கள் கைவரிசை - 50,000 ரூபாய் திருட்டு!