ETV Bharat / jagte-raho

குடும்ப தகராறு காரணமாக 10 மாதப் பேத்தியைக் கொன்ற தாத்தா - குழந்தை கொலை

கோவை: குடும்பத்தில் மகன், மருமகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களின் பத்து மாதக் குழந்தையைப் பேத்தி என்றும் பராமல் கொடூரமான முறையில் தாத்தா கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

selva
author img

By

Published : Jul 30, 2019, 5:12 PM IST

Updated : Jul 30, 2019, 6:04 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு கருப்பம்பாளையம் பகுதியில் வசித்துவருபவர் குமார் (30). இவர் தனது மனைவி முத்துமாலை, பத்து மாத மகள் தர்ஷினியுடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை முத்துமாலை தனது வீட்டில் இருந்தபோது ஆத்திரத்துடன் நுழைந்த குமாரின் தந்தையான செல்வராஜ் கைக்குழந்தையுடன் இருந்த முத்துமாலையை கீழே தள்ளி அவரிடமிருந்து குழந்தை தர்ஷினியை பிடுங்கி வாகனத்தில் கடத்திச்சென்றுவிட்டார். இது குறித்து முத்துமாலை தனது கணவர் குமாருக்கு தெரிவிக்கவே இருவரும் சேர்ந்து குழந்தையை தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் இரவு வரை குழந்தை கிடைக்காததால், குமார் கிணத்துக்கடவு காவல் துறையிடம் புகார் செய்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த கிணத்துக்கடவு காவல் துறையினர் செல்வராஜின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்தனர். அதன் மூலம் அவர் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அங்கு விரைந்து செல்வராஜை கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியது.

அப்போது, கிணத்துக்கடவுக்கு அருகே உள்ள ஒத்தக்கால்மண்டபம்-தொப்பம்பாளையம் பிரிவு பகுதியில் வைத்து குழந்தையை தான் கொலை செய்ததாக செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் சம்பவ இடத்திற்கு செல்வராஜை அழைத்துசென்ற காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை நடைபெற்ற இடம்

விசாரணையின்போது செல்வராஜுக்கு மற்றொரு மனைவி இருந்ததும். இரண்டாம் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இரண்டாம் மனைவி சக்திகனி அவரைவிட்டு பிரிந்துசெல்ல தனது மகனும், மருமகளும்தான் காரணம் என நினைத்து குழந்தையை செல்வராஜ் கடத்தி சென்றுள்ளார். மகன் காவல் துறையில் புகார் செய்த தகவல் அறிந்ததும் ஆத்திரத்தில் 10 மாத குழந்தையை பேத்தி என்றும் பாராமல் செங்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

Intro:marderBody:marderConclusion:பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் மனைவிபிரிந்து சென்றதால் 10 மாதகுழந்தையை கடத்தி கல்லால்தாக்கி கொலைசெய்தவர்கைது .
பொள்ளாச்சி -30

கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள
கிணத்துக்கடவு
கருப்பம்பாளையம்பகுதியில் வசித்துவருபவர்
குமார் (30)இவரது மனைவி முத்துமாலை வயது (30) இவர்களுக்கு தர்ஷினி 10 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை முத்து மாலை தனது வீட்டில் கைக்குழந்தையுடன் இருந்த போது அங்கு வந்த குமாரின் அப்பா முத்துமாலை கையில் இருந்த குழந்தை தர்ஷினியை பிடிங்கி முத்துமாலையை கீழேதள்ளிவிட்டு மோட்டார்சைக்கிளில் கொண்டுசென்றார்.இதுகுறித்து முத்துமாலை தனது கணவர் குமாருக்குதெரிவித்தார் .இதனையடுத்து குமார் தனது அப்பா செல்வராஜையும் குழந்தை தர்ஷினியையும் தேடினார்கள்
ஆனால் இரவுவரைகிடைக்காததால் .குமார் கிணத்துக்கடவு போலீசில்புகார்செய்தார் .இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசார் செல்வராஜ்மீது குழந்தையைகடத்தி சென்றதாக வழக்குபதிவுசெய்து தேடியபோது . செல்போன் டவர்மூலம் செல்வராஜ் போனை ஆய்வுசெய்தபோது கிணத்துக்கடவு ரெயில்நிலையத்தில் இருப்பதாக தெரியவந்தது .இதனையடுத்துபோலீசார் செல்வராஜ்ஐ போலீசார்கைது செய்து விசாரித்ததில் குழந்தையை ஒத்தக்கால்மண்டபம்-தொப்பம்பாளையம் பிரிவுபகுதியில் குழந்தையை கொலைசெய்ததாக கூறினார் .இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்க்கு செல்வராஜை அழைத்துசென்று குழந்தையில் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விசாரணையில் செல்வராஜின் 2-ம்மனைவி சக்திகனிபிரிந்து
செல்லகாரணம் தனதுமகனும் ,மருமகளும்தான்காரணம் என நினைத்துகுழந்தையை கடத்திசென்றவர்மகன்போலீசில்புகார்செய்ததால் இனிதப்பமுடியாது எனநினைத்தவன் 10 மாத குழந்தையை பேத்தி என்றும்பாராமல் செங்கல்லால் தாக்கி கொலைசெய்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
Last Updated : Jul 30, 2019, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.