ETV Bharat / jagte-raho

ஆசிரியை அடித்து கண் பார்வை இழந்த மாணவன் உயிரிழப்பு! - Death of blind student

சென்னை: மேடவாக்கத்தில் பள்ளி ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் அடித்து கண் பார்வையிழந்த எட்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

school
school
author img

By

Published : Oct 10, 2020, 9:04 AM IST

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த வேலு -ரேகா தம்பதியின் மகன் கார்த்திக் (14). இவர் மேடவாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் தமிழ் ஆசிரியை இரும்பு ஸ்கேலால் அடித்துள்ளார்.

கார்த்திக்கின் தலையில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், சிறிது தினங்களில் அவருக்கு பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளது. கண் மருத்துவமனையை அணுகியநிலையில், மூளையில் ரத்தக்கசிவு மற்றும் அவரது கண் சற்று வெளியே வந்துள்ள அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கார்த்திக்கின் பெற்றோர் தொலைபேசி மூலம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, எனக்கு அமைச்சர்வரை ஆள்கள் தெறியும் உங்களால் முடிந்ததை பாருங்கள் எனக் கூறியுள்ளார். நாளுக்கு நாள் கார்த்திக்கின் கண் பார்வை மங்கியதால், அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததின் பேரில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், கார்த்திக்கின் இடது கண் பார்வை பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து நரம்பு சம்பந்தமான தீவிர சிகிச்சையில் கார்த்திக் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவர் கார்த்திக்கு புற்றுநோய் இருப்பதாகவும், தலையில் அடிப்பட்டதால் மூளை நரம்புகள் துண்டிக்கப்பட்டு கண் வழியே இரத்தம் வந்துக்கொண்டிருப்பதாகவும், டியூப் மூலம் இரத்தங்களை வெளியேற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.

கண்ணை இழந்த மாணவன் உயிரிழப்பு
கண்ணை இழந்த மாணவன் உயிரிழப்பு

கரோனா தொற்று காரணமாக மாணவர் கார்த்திக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வீட்டிற்கு அழுத்து வரப்பட்ட கார்த்திக் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மேடவாக்கம் பள்ளி ஆசிரியர் கார்த்திக்கின் தலையில் அடித்ததால்தான் கார்த்திக் மரணமடைந்ததாக பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

தண்டிக்கப்பட வேண்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க தவறிய தலைமையாசிரியர், அதிகார பீடத்தில் பெற்றோரை மிரட்டியும், மாணவனின் உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாத தலைமையாசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசின் விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகள்: கரோனா தொற்று பரவும் அபாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.