ETV Bharat / jagte-raho

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக மருத்துவர் நாடகம்? காவல்துறையினர் தீவிர விசாரணை! - crime news in thiruvallur

திருவள்ளூர்: வளசரவாக்கம் அருகே 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரிடமே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை திருடு போனதாக கூறிய வீடு
author img

By

Published : Aug 14, 2019, 3:57 PM IST

திருவள்ளூர் மாவட்டம் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலை, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை. ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றும் இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு மதுரை சென்றுவிட்டு இன்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின், வீட்டில் இருந்த 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நகைத் திருட்டு நடைபெற்றாதாக கூறப்படும் வீடு

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் விசாரித்தபோது, மருத்துவர் தங்கதுரை தனது வீட்டை சில மாதங்கள் முன்பே காலி செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, வீட்டை காலி செய்துவிட்டு 150 சவரன் நகைகளை மட்டும் ஏன் விட்டுச் சென்றாரா? அல்லது நகைகள் கொள்ளையடிக்கப்படாமலே கொள்ளை சம்பவம் நடைபெற்றிருப்பதாக நாடகம் ஆடுகிறாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மருத்துவர் தங்கத்துரையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தொடர்ந்து விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

Intro:வளசரவாக்கத்தில் டாக்டரின் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை.காவல்துறையினர் விசாரணை.
Body:சென்னை அடுத்த வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் மெயின் ரோடு, இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தங்கதுரை(56), ஓமியோபதி டாக்டராக உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மதுரை சென்று விட்டு இன்று வீடு திரும்பியுள்ளார். வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.பின்னர் வீட்டில் இருந்த 150 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:முதல் கட்ட விசாரணையில் வீடு நீண்டகாலமாக பயன்படுத்தாமல் இருந்துள்ளது. இதுகுறித்து அருகிலுள்ள குடியிருப்புவாசிகளிடம் விசாரித்தபோது மருத்துவர் தங்கதுரை வீட்டை காலி செய்து சில மாதகாலம் ஆகியுள்ளது என தெரியவந்துள்ளது. எனவே,வீட்டை காலி செய்த அவர்கள் 150 சவரன் நகைகளை மட்டும் ஏன் விட்டு சென்றானர், நகை கொள்ளை போகாமலே கொள்ளை போனதாக நாடகம் ஆடுகிறாரா? என்ற கோணத்தில் புகார் அளித்த மருத்துவர் தங்கத்துரையிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.