ஈரோடு திண்டல் அருகேயுள்ள செங்கோடம்பாளையம் சிவன் நகர் பகுதியில் வசித்துவருபவர் வாசுதேவன். இவர் கேரள உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு பால் அனுப்பிவைக்கும் பணியை ஒப்பந்தத்தின்பேரில், சரக்கு வாகனங்களில் நாள்தோறும் விநியோகம் செய்யும் தொழிலை மேற்கொண்டுவருகிறார்.
இந்த நிலையில் இவர் குடும்பத்தினர் அனைவருடன் வெளியூர் செல்வதற்காக நேற்று முன்தினம் (மே 31) வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 2) காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு தாலூகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் கைரேகை வல்லுநர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பீரோவிலிருந்த 75 சவரன் தங்க நகைகள், இரண்டு லட்சம் ரூபாய் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ள கொள்ளையர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
குடியிருப்பு மிகுந்த பகுதியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் கொள்ளை!
ஈரோடு: பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே இருந்த 75 சவரன் தங்க நகைகள், இரண்டு லட்சம் ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.