கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள வண்டிபாளையம் பகுதியில் சென்னையிலிருந்து திருச்செங்கோடு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் சக்கரத்தின் டயர் வெடித்து சாலையின் தடுப்புக் கட்டையை தாண்டி எதிர்புறமாக விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநரும் காரில் பயணம் செய்த இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் சென்ற இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்து உயிருக்காக போராடி கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 8 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் விபத்தில் சிக்கிய கார் மற்றும் பேருந்து ஆகியவற்றை தீயணைப்பு படையினர் மீட்டு சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து திருநாவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
மோடி வழிகாட்டுதலில் தமிழ்நாட்டு மக்கள் செயல்பட்டால்.. பொன்.ராதாகிருஷ்ணனின் பொங்கல் வாழ்த்து!