சென்னைக்கு வெளிநாட்டு பறவைகளை ஹவுரா தொடர்வண்டியில் சிலர் கடத்திச் செல்வதாக யானை கவுனி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த காவலர்கள் சென்ட்ரல் தொடர்வண்டி நிலைய பார்சல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த வாகனங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றை சோதித்த போது, அதில் ஆறு கூண்டுகளில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான குரங்குகள், வெளிநாட்டு பறவைகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த வாகனத்தை பின் தொடர்ந்து காரில் வந்த நபரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், மதுரையைச் சேர்ந்த ரியாஸ் (34), முகமது ஆசிப் (34), கொசப்பேட்டையைச் சேர்ந்த பரத் (28), சூளையைச் சேர்ந்த ஜேசு (32) என்பது தெரியவந்தது. மேலும், ஹவுராவில் இருந்து தொடர்வண்டி மூலம் வெளிநாட்டு பறவைகளை சென்னைக்கு கொண்டு வந்து புரசைவாக்கத்திற்கு எடுத்துச் செல்வதாக பரத் என்பவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இவை சட்டவிரோதமாக கடத்தி வந்த வெளிநாட்டு பறவைகளா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.12 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்: காவல் துறை விசாரணை!