லக்னோ (உத்தரப் பிரதேசம்): பிரிட்டனிலிருந்து திரும்பி தலைமறைவானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறை தேடிவருகின்றது.
டிசம்பர் 2020இல் மட்டும் 1600 நபர்களுக்கு மேல் பிரிட்டனிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு வந்திருந்தனர். அதில் 300 பேர் எங்கு சென்றனர் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.
இச்சூழலில், தலைமறைவான 300 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து பிரிட்டனிலிருந்து வந்த சிலருக்கு, அறிகுறிகள் இல்லாத உருமாறிய கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டனிலிருந்து நாடு திரும்பியவர்கள் 28 நாள்களுக்குத் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.