பல்லாவரம் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு மளிகைக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் நேற்று அந்த மளிகைக் கடையில் சோதனை நடத்தினர். அப்போது, கடையின் தனியறையில் குட்கா, பான் மசாலா போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 55 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்த காவலர்கள், கடை உரிமையாளர்கள் மாடசாமி (55) மற்றும் அவரது மகன் கணபதி (26) ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவு: பெண் அடித்துக் கொலை