தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த மைசூரான்கோட்டையை சேர்ந்தவர் குப்பன். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வந்துள்ளார்.
இது குறித்து இண்டூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். விவசாய நிலத்தில் துவரை செடிகளுடன், ஊடு பயிராக கஞ்சா செடிகளை விவசாயி குப்பன் வளர்த்தது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்தனா். பின்னர் வழக்குப்பதிவு செய்து குப்பன் வைத்திருந்த ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் கஞ்சா விற்பனை: பெண்கள் உள்பட 10 பேர் கைது!