ETV Bharat / jagte-raho

ஆள் கடத்தல் வழக்கில் ரவுடி சீசிங் ராஜா கைது! - சென்னை குற்றச் செய்திகள்

சென்னை : ஆள் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி சீசிங் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஏழு பட்டாக் கத்திகள், மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Rowdy Seizing Raja
Rowdy Seizing Raja
author img

By

Published : Dec 12, 2020, 7:09 AM IST

சென்னை குரோம்பேட்டை, ஐஸ்வர்யா நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சரவணன்(43). கடந்த 19ஆம் தேதி, இவரது வீடு புகுந்த ஜெயராமன் மற்றும் சில நபர்கள், சீசிங் ராஜா அழைத்து வர சொன்னதாக கூறி வந்து சரவணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, கண்ணை கட்டி அவருடைய காரிலேயே அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அவரை ஆயுதங்களால் தாக்கி, 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என சீசிங் ராஜா மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக சரவணன் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிட்லப்பாக்கம் காவல்துறையினர் சீசிங் ராஜா, ஜெயராமன் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஏழு பட்டா கத்திகள், மூன்று கார்கள் ஆகியவைகளை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: கொள்ளையர்களை தீவரமாக தேடிவரும் போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.