ETV Bharat / jagte-raho

கையும்களவுமாக பிடிபட்ட போலி சிபிஐ அதிகாரி

author img

By

Published : Jan 14, 2020, 3:38 PM IST

Updated : Jan 14, 2020, 3:50 PM IST

சென்னை: பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த போலி சிபிஐ அதிகாரி டிக்கெட் பரிசோதனையின்போது பிடிபட்டார்.

arrest
arrest

சோழிங்கநல்லூரிலுள்ள உணவகத்தில் பணிபுரிந்துவருபவர் சந்திரபாபு (35). இவர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் குடிபோதையில் நின்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர், தான் சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சோதனை செய்து, சந்திரபாபு பாக்கெட்டிலிருந்த போதைப் பாக்கு, 7,500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துள்ளார். பின்னர், போதைப் பொருள் வைத்துள்ளது குறித்து விசாரிக்க வேண்டுமெனக் கூறி அவரைப் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். பேருந்து அயனாவரம் ஜாயிண்ட் ஆபிஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அப்பேருந்தில் பரிசோதகர் ஏறி டிக்கெட்டுகளை சோதனை செய்துள்ளார்.

அப்போது சந்திரபாபு, சிபிஐ அதிகாரி எனக் கூறிய நபர் ஆகிய இருவரிடமும் டிக்கெட் இல்லாததால் பேருந்தை விட்டு கீழே இறக்கி அபராதத் தொகை செலுத்துமாறு பரிசோதகர் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் குடிபோதையில் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால், அயனாவரம் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்துள்ளார்.

விசாரணையில் அந்த நபர் கொடுங்கையூரைச் சேர்ந்த ரஹீம் ( 52) என்பதும், சிபிஐ அதிகாரியாக நடித்து பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக எழும்பூர், வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இவரிடமிருந்து போலி வருமானவரித்துறை அடையாள அட்டை, போலி சிபிஐ அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: இளைஞர் அரிவாளால் வெட்டிப் படுகொலை - கொலையாளி யார்?

Intro:Body:அயனாவரத்தில் போலி சிபிஐ அதிகாரி டிக்கெட் பரிசோதகர் மூலம் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்...*

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பிளாட்பாரத்தில் தங்கி ஹோட்டலில் பணிபுரிந்து வருபவர் சந்திரபாபு(35).இவர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் குடித்துவிட்டு பேருந்துக்காக நின்று கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு சோதனை செய்யவேண்டும் என சந்திரபாபு பாக்கெட்டில் இருந்த போதை பொருள் ஹன்ஸ் மற்றும் 7500 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். பின்னர் போதை பொருள் வைத்துள்ளதாக கூறி காவல் நிலையம் அழைத்து கொண்டு விசாரணை செய்யவேண்டும் என 45g பேருந்தில் அழைத்து கொண்டு சென்றுள்ளார். அப்போது பேருந்தானது அயனாவரம் ஜாயிண்ட் ஆபிஸ் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது பேருந்தில் டிக்கெட் பரிசோதகர் ஏறி டிக்கெட் சோதனை செய்துள்ளார்.

அப்போது சந்திரபாபு மற்றும் சிபிஐ அதிகாரி என கூறிய மர்ம நபர் இருவரிடமும் டிக்கெட் இல்லாததால் பேருந்தை விட்டு கீழே இறங்கி அபராத தொகை செலுத்த கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் குடிப்போதையில் குடிப்போதையில் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் அயனாவரம் காவல் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் ஒப்படைத்து உள்ளனர். பின்னர்
விசாரணையில் கொடுங்கையூரை சேர்ந்த ரஹீம்( 52) என்பதும் சிபிஐ அதிகாரியாக நடித்து பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் இவர் மீது வழக்கு பதிவு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து வருமானவரித்துறை அடையாள அட்டை, சிபிஐ அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.Conclusion:
Last Updated : Jan 14, 2020, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.