ETV Bharat / jagte-raho

ரூ.48 லட்சம் அபேஸ்: முன்னாள் வங்கி மேலாளர் கைது - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: இறந்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.48 லட்சத்தை திருடிய முன்னாள் வங்கி மேலாளரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ex-iob-bank-manager-arrested-for-bank-fraud-case

author img

By

Published : Nov 25, 2020, 6:13 AM IST

சென்னை கொடுங்கையூரில் உள்ள எருக்கஞ்சேரி இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திர பாபு. இவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ”முன்னாள் எருக்கஞ்சேரி கிளை இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தவர் வினோத்(33). இவர் தங்களது வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் சிலர் நீண்ட நாள்களாகயும், வங்கி கணக்கை பயன்படுத்தமால் உள்ளதை கண்காணித்து வந்துள்ளார்.

பின்னர் இறந்து போன நபர்களின் வங்கி கணக்கை தேர்ந்தெடுத்து அவர்களது கணக்கில் இருந்த பணத்தைத் திருட திட்டம் தீட்டி, முடங்கி கிடந்த வங்கி கணக்கை செயல்பட வைத்துள்ளார்.

பின்னர் இவர் தனது கூட்டாளி நடராஜ் என்பவருடன் சேர்ந்து வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் செய்துவிட்டு போலியான ஆவணங்களை உருவாக்கி ஏ.டி.எம் கார்டை பெற்று, அதன் மூலம் அவர்களது வங்கி கணக்கில் இருந்த சுமார் 47.60 லட்ச ரூபாய் பணத்தை திருடியுள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்னாள் வங்கி மேலாளர் வினோத், அவரது கூட்டாளி நடராஜனுடன் சேர்ந்து இறந்த போன 18 நபர்களின் பணத்தை நூதன முறையில் திருடியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருடுபோன 400 சவரன் நகையில் 200 சவரன் நகைகள் மீட்பு: 7 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.