ETV Bharat / jagte-raho

மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலி! ஒருவர் கைது! - ELECTRICITY

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் போர்வெல் போடுவதற்காக சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த வழக்கில் போர்வெல் நிறுவன உரிமையாளர் பழனிராஜ் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

DEAD
author img

By

Published : Aug 9, 2019, 8:33 PM IST

சென்னையை அடுத்துள்ள கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் சிவா, பாண்டி. இவர்கள் இருவரும் மாதவரம் அருகே உள்ள ரித்தீஷ் போர்வெல் நிறுவனத்தில் வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் டிபி சத்திரம் ராணி அண்ணா நகரில் வசிக்கும் தேவகி என்பவரது வீட்டிற்கு போர்வெல் போடுவதற்காக நேற்று மதியம் சென்றிருந்தனர்.

அப்போது, போர்வெல் இயந்திரத்தை சரியாக நிலை நிறுத்துவதற்கான பணிகளை செய்து கொண்டிருந்தபோது மின்சாரக் கம்பிகள் தரையில் இருப்பது தெரியாமல் கடப்பாறையை கொண்டு கீழ் நோக்கி குத்தியுள்ளனர். அதில் மின்சாரம் பாய்ந்து இரு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விசாரனை  இரண்டு பேர் பலி  மின்சாரம்  சென்னை  CHENNAI  ELECTRICITY  ATTACKED
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிவா, பாண்டி ஆகியயோரது சடலங்கள்

மின்சாரம் தாக்கியதில் முனியாண்டி என்பவரும் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டிபி சத்திரம் காவல் துறையினர், போர்வெல் நிறுவனத்தின் உரிமையாளர் பழனிராஜின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

விசாரனை  இரண்டு பேர் பலி  மின்சாரம்  சென்னை  CHENNAI  ELECTRICITY  ATTACKED
மின்சாரம் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முனியாண்டி

இதனைத் தொடர்ந்து அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் இப்பகுதியில் செல்லும் மின்சாரம் கம்பிகளை பூமியினுள் புதைக்காமல் மின்சார ஊழியர்கள் மிக அலட்சியமாக இருந்ததும் ஒருகாரணம் என்று பொது மக்கள் கூறினர்.

இதுகுறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அதுதொடர்பான முறையான அறிக்கை மின்சார வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட பின்னர் இந்த விபத்துக்கு காரணமான மின்சார ஊழியர்கள் மீதும் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் என டிபி சத்திரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro:Body:கீழ்ப்பாக்கத்தில் தண்ணீருக்காக போர் போடும் பொழுதே மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்த வழக்கில் ரித்தீஷ் போர்வாள் உரிமையாளர் பழனிராஜ் கைது.*

*மின்சார இணைப்பை சரியாக பூமிக்கு அடியில் புதைக்காமல் மக்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் வகையில் பணி செய்த மின்வாரிய ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை*

சென்னை டிபி சத்திரம் ராணி அண்ணா நகரில் தேவகி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது இந்த வீட்டின் தண்ணீர் தேவைக்காக நேற்று போர்வெல் போடும் பணியை தொடங்கி இருக்கிறார்கள்.

இதற்காக மாதவரம் பகுதியில் உள்ள ரித்தீஷ் போர்வெல் கம்பெனி உரிமையாளர் பழனிராஜ் நேற்று தேவகியின் வீட்டுக்கு போர்வெல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரித்திஷ் போர்வெல் உரிமையாளர் பழனிராஜ் தலைமையில் சுமார் ஆறு தொழிலாளர்கள் இந்த போர்வெல் பணியில் ஈடுபட்டு வந்தனர் அப்போது சரியாக மதியம் 2 மணி அளவில் போர் வெல் இயந்திரத்தை நிலையாக நிறுத்துவதற்கான பணிகளை செய்யும் பொழுது கடப்பாரை கொண்டு போர்வாள் இயந்திரத்தை நிலை நிறுத்த முயற்சி செய்தபோது, கீழே மின்சாரம் சென்று கொண்டிருப்பது தெரியாமல் கடப்பாறையால் குத்திய போது அதில் மின்சாரம் பாய்ந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த கொளத்தூரைச் சேர்ந்த சிவா மற்றும் பாண்டி என்ற இரு இளைஞர்கள் மின்சாரத்தால் தாக்கப்பட்ட தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் போர்வெல் பணியில் இருந்த மற்றொரு நபரான முனியாண்டி என்பவரும் மின்சார தாக்குதலுக்கு உள்ளான போது அவரை உரிமையாளர் பழனிராஜ் காப்பாற்றினார்.

அவர் தற்போது ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி விசாரணை நடத்திய டிபி சத்திரம் போலீசார் இந்த விபத்துக்கு அஜாக்கிரதையாக இருந்த போர்வெல் கம்பெனி உரிமையாளர் பழனிராஜுதான் காரணம் என தெரிய வந்ததால் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் டிபி சத்திரம் பகுதியில் மின்சார ஊழியர்களின் மிக அலட்சியமாக மின்சாரம் செல்லும் வயர்களை பூமியினுள் புதைக்காமல் பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியே விட்டிருந்தது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அது குறித்த முறையான அறிக்கை மின்சார வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட பின்னர்
இந்த விபத்துக்கு காரணமான மின்சார ஊழியர்கள் மீதும் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என டிபி சத்திரம் போலீசார் தெரிவித்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.