ETV Bharat / jagte-raho

கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மருந்துகள் சப்ளை - 8 பேர் கைது

author img

By

Published : Sep 30, 2020, 9:27 AM IST

கன்னியாகுமரி: மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தவர் மூலம் ஊசி மருந்துகள் போதைக்காக சப்ளை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இவர்களின் பின்னணி தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Drug supply to students
போதை மருந்து சப்ளை செய்த கும்பல்

நாகர்கோவில் வடசேரி காவல் ஆய்வாளர் காளீஸ்வரி, தனிப்படை உதவி ஆய்வாளர் அனில் குமார் தலைமையில் வடசேரி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த கார் ஒன்றை சோதனை செய்ய முற்றபட்டபோது, காவலர்களை பார்த்ததும் 2 நபர்கள் தப்பி ஓடினர்.

இதையடுத்து காரில் இருந்த கட்டையன்விளை காமராஜர் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (55), புததேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் (23), முத்துக்குமார் (33), திருநெல்வேலி விகே புரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா, கருங்குளம் பகுதியை சேர்ந்த கண்ணன் (44) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

மேலும், காரில் சோதனை நடத்தியபோது 22 கிலோ கஞ்சா மற்றும் ஊசி மருந்து பாக்கெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஊசி மருந்துகள் அனைத்தும் மருத்துவமனைகளில் வலி நிவாரணம் மற்றும் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடியதாகும். இந்த கும்பல் போதைக்காக இவற்றை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காரில் சிக்கிய 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தப்பி ஓடியது நாகர்கோவிலை சேர்ந்த சேகர் மற்றும் சரத் என தெரியவந்தது.

இவர்கள் இரண்டு பேர் மீதும் ஏற்கனவே கொலை, கஞ்சா வழக்கு காவல் நிலையங்களில் உள்ளன. பின்னர் தப்பியோடிய சேகர் மற்றும் சரத் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Drug supply to students
போதை மருந்து கும்பலிடம் கஞ்சா பறிமுதல்

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த மரிய அற்புதம் என்பவர் மூலம் ஊசி மருந்துகள் கிடைத்தது தெரியவந்த நிலையில், அந்த நபரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மரிய அற்புதத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளன. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:

மரிய அற்புதம்தான் இந்த போதை கும்பலுக்கு தலைவனாக இருந்துள்ளார். இவர் ஆசாரிப்பள்ளத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தியுள்ளார். ஆனால் தொழிலில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக கடையை மூடியுள்ளார். பின்னர் அந்த மெடிக்கல் ஸ்டோர் லைசென்சை வைத்து ஊசி மருந்துகள் வாங்கலாம் என முடிவு செய்துள்ளார்.

இவருக்கு மருந்துகள் பற்றி நன்றாக தெரியும் என்பதால், என்னென்ன மருந்துகள் பயன்படுத்தினால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து அதன் மூலம் தனக்கு தெரிந்த மருந்து விற்பனை பிரதிநிதிகள் மூலம் ஊசி மருந்துகள் வாங்கியிருக்கிறார்.

Drug supply to students
கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் போதை ஊசி

பின்னர் அதனை சேகர் மூலம் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்துள்ளார். இந்த கும்பலின் பிடியில் வேறு யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: வங்கியிலிருந்து ரூ.20 லட்சத்தை திருடிய 10 வயது சிறுவன்: காணொலி வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.