திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ். இவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்தக் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியின்போது நாகராஜூக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை மப்பேடு அருகே சுங்குவார்சத்திரம் சாலையில் புதுப்பட்டு கிராமம் செல்லும் வழியில் நாகராஜ் 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு காவல் துறையினர் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு புதுப்பட்டு பகுதியில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியின் போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறு குறித்து தெரியவந்துள்ளது. எனவே இதன் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழப்பு!