ETV Bharat / jagte-raho

மருத்துவர் உடல் அடக்க சர்ச்சை விவகாரம்; திமுகவினருக்கு வலைவீச்சு - dmk office bearers gets involved in dr simon burial issue

சென்னை: பிரபல மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் அரசு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, பொதுமக்களை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியதாக திமுக நிர்வாகிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

corona
corona
author img

By

Published : Apr 21, 2020, 10:52 PM IST

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்த நரம்பியல் மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் இவரது உடலை அடக்கம் செய்ய டி.பி சத்திரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கல்லறைக்கு அலுவலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

அப்போது அப்பகுதி மக்கள் சுமார் 90 பேர் ஒன்று கூடி, இவர்களது வாகனத்தை மறைத்து மருத்துவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் அரசு அலுவலர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, அவருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மருத்துவரின் உடலை வேலாங்காடு கல்லறையில் அடக்கம் செய்தனர்.

பின்னர் அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது ஊரடங்கை மீறுதல், 269 தொற்று நோய் பரவுதல், 145 கலைந்து செல்லும்படி கூடியும் சட்டவிரோதமாக கூடுதல், சிறைபிடித்தல், 294 பி ஆபாசமாகத் திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ

இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் திமுக வட்டச் செயலாளர் பாபு, அவைத் தலைவர் சம்பத், கட்சி உறுப்பினர் சுதா, மாணவரணி துணை அமைப்பாளர் சூர்யா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் தான் சாலை மறியலுக்கு மக்களைத் தூண்டியது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாகியுள்ள திமுக நிர்வாகிகளைக் காவல் துறையினர் தற்போது வலைவீசித் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.