திண்டுக்கல்: இளைஞர் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்த குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியபட்டியில் வசித்துவருகிறார் சின்னத்தம்பியின் மகன் ஸ்ரீகாந்த்(18). இவர் சென்னையிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் தனது சொந்த ஊரான ரெட்டியபட்டிக்கு வந்திருந்தார்.
இச்சூழலில் நேற்றிரவு (நவ. 4) வீட்டின் அருகே ஸ்ரீகாந்த்தை வழி மறித்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடினர். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்து, அங்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி, நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
எதற்காக ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டார்? முன்பகை காரணமா? அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறா? என்பன போன்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.