ETV Bharat / jagte-raho

காட்டுப்பன்றி என நினைத்து காதலர்களை சுட்ட விவசாயி - காதலன் பலி! - காட்டுப்பன்றி எனச் சுட்டதால் காதலன் பலி

தருமபுரி: திருமண உறவை மீறிய காதலில் இருந்தவர்களை, காட்டுப்பன்றி என நினைத்துச் சுட்டதில் காதலன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dharmapuri gun shout, man killed
author img

By

Published : Oct 12, 2019, 6:42 PM IST

Updated : Oct 12, 2019, 10:37 PM IST

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரயில் பாதையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்தவர் உலகனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் எனத் தெரியவந்தது.

உயிரிழந்த ஆறுமுகம்
உயிரிழந்த ஆறுமுகம்

இதனையடுத்து ஆறுமுகத்தின் உடலை மீட்ட காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து உடற்கூறாய்விற்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வு மேற்கொண்டதில் ஆறுமுகத்தின் உடலில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் சிக்கமாரண்டஅள்ளி ரயில்வே தண்டவாள பகுதியில் தடயங்களைச் சேகரித்தனர். அங்குத் தடயங்கள் ஏதும் கிடைக்காததால் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சண்முகம் என்பவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் நிலக்கடலை செடிகளுக்கிடையே ரத்தம் கொட்டிக்கிடந்ததை தடயவியல் சோதனையின் மூலம் கண்டறிந்தனர்.

மேலும் ஆறுமுகத்தை சண்முகம்தான் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ரயில் தண்டவாளத்தில் வீசியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆறுமுகத்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சண்முகம்

சண்முகத்தின் விவசாய நிலத்தில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றி சுற்றித் திரிவதால் நாட்டுத் துப்பாக்கியுடன் காவலில் ஈடுபட்டுவந்துள்ளார். அப்படி காவலிலிருந்தபோது, விவசாய நிலத்தில் ஒரு பகுதியில் முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை நோக்கி சண்முகம் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பின்பு அபாய குரல் கேட்டு அங்குச் சென்று பார்த்தபோது ஆறுமுகம் தலையில் குண்டுக் காயம் பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்திருக்கிறார். அவரோடு அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி ராதாவும் காயங்களோடு இருந்துள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகம் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சண்முகம் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரின் உதவியுடன் ஆறுமுகத்தின் உடலை ரயில் பாதையில் நடுவே போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனால் அவ்வழியாகச் சென்ற ரயில் மோதி அவரது உடல் சிதைந்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆறுமுகம் உடலை தண்டவாளத்தில் தூக்கி போட உதவிய சின்னசாமி

இதில் காயமடைந்த ராதா மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் முதுகில் பட்ட குண்டுக் காயம் தொடர்ந்து வலி ஏற்படவே, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்றுள்ளார். பின்பு சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை காவல்துறை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆறுமுகத்தின் மீது துப்பாக்கியால் சுட்ட சண்முகம் மற்றும் உடலை ரயில்வே தண்டவாளத்தில் போட உதவிய சின்னசாமி இருவரையும் ரயில்வே காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க...மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை

Intro: கள்ளக்காதலியுடன் தனிமை பன்றி என துப்பாக்கி சூடு தருமபுரி மாரண்டஅள்ளி ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் துப்பு துலங்கியது இருவர் கைது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளி பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரயில் பாதையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே போலிசார் விசாரணையில் அந்த சடலம் உலகனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என தெரியவந்தது.ஆறுமுகத்திற்கு முத்துவேடி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.ஆறுமுகம் மரண வழக்கை விசாரித்து வந்த ரயில்வே போலீசார் ரயில் மோதி உயிரிழந்தார் என கருதி வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் மதன்ராஜ் ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தார் அப்போது அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை கண்டறிந்து இத்தகவலை தருமபுரி ரயில்வே காவல் துறைக்கு அளித்துள்ளனர் . இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் சிக்க மாரண்டஅள்ளி ரயில்வே தண்டவாள பகுதியில் தடயங்களை சேகரித்தனர் அங்கு தடயங்கள் ஏதும் கிடைக்காததால் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடினர் அப்போது சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் நிலக்கடலை செடிகளுக்கிடையே ரத்தம் கொட்டிக்கிடந்தது கண்டறிந்து தடவி தடயவியல் சோதனையில் ஈடுபட்டனர் சோதனையில் நாட்டு துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டுகள் என கண்டறிந்தனர் இதனை எடுத்து ஆறுமுகத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்து ரயில் தண்டவாளத்தில் வீசியதை கண்டறிந்தனர். இதனையடுத்து சண்முகத்தை கைது செய்து விசாரித்தனர் விசாரணையில் ஆறுமுகத்தை சுட்டுக் கொன்றதை சண்முகம் ஒப்புக்கொண்டுள்ளார் தொடர் விசாரணையில் தனது விவசாய நிலத்தில் இரவு நேரங்களில் காற்று காட்டுப்பன்றி சுற்றித் திரிவதாகவும் அதனால் இரவு நேரங்களில் துப்பாக்கியோடு வயல் வெளியே சுற்றி வந்ததாகவும் விவசாய நிலத்தில் ஒரு பகுதியில் முனுகல் சத்தம் கேட்டதால் அந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் சுடப்பட்ட பின்பு அபாய குரல் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது ஆறுமுகம் தலையில் குண்டு காயம் பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவரோடு அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மனைவி ராதா உடலில் காயங்களோடு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து சண்முகம் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் உதவியை நாடியுள்ளார் .இதனிடையே ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை சின்னசாமி மற்றும் சண்முகம் ரயில் பாதையில் நடுவே போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர் அவ்வழியாக சென்ற ரயில் மோதி அவரது உடல் சிதைந்து கிடந்தது.துப்பாக்கிக் குண்டுபட்டு ராதா மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் வீட்டுக்கு சென்று உள்ளார் அவர் முதுகில் பட்ட குண்டு காயம் தொடர்ந்து வலி ஏற்படவே அடுத்தநாள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று பின்பு சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரை போலீசார் கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில் ஆறுமுகத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சண்முகம் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசிய உதவிய சின்னசாமி இருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆறுமுகம் தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க வயல்வெளி இருட்டில் காட்டுப்பன்றி என நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Body: கள்ளக்காதலியுடன் தனிமை பன்றி என துப்பாக்கி சூடு தருமபுரி மாரண்டஅள்ளி ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் துப்பு துலங்கியது இருவர் கைது.

Conclusion: கள்ளக்காதலியுடன் தனிமை பன்றி என துப்பாக்கி சூடு தருமபுரி மாரண்டஅள்ளி ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் துப்பு துலங்கியது இருவர் கைது.

Last Updated : Oct 12, 2019, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.