ETV Bharat / jagte-raho

அம்பத்தூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து சைக்கிள் திருடிய பலே திருடன் - சைக்கிள்

சென்னை: அம்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து சைக்கிளை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

theft
author img

By

Published : May 22, 2019, 1:49 PM IST

Updated : May 22, 2019, 2:04 PM IST

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் ரோடு, பெரியார் நகர் பகுதியில் வசித்துவருபவர் ராமகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் இன்று மாலை ஐந்து மணி அளவில் ராமகிருஷ்ணன் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த சைக்கிளின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளார்.

திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி

இச்சம்பவம் ராமகிருஷ்ணனின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து ராமகிருஷ்ணன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சைக்கிள் திருடனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இதுபோன்ற திருட்டுச் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:சென்னை அம்பத்தூர் அருகே பட்ட பகலில் வீடு புகுந்து சைக்கிளை மட்டும் திருடும் வினோத திருடன் சிசிடிவி காட்சிகள் கொண்டு அம்பத்தூர் காவல்துறை விசாரணை.

Body:சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் ரோடு,பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்.இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.இவர் தன்னுடைய குழந்தைக்கு லேடி பேர் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் ராமகிருஷ்ணன் வீட்டினுள் அடையாளம் தெரியாத மர்ம நபர் புகுந்து தன்னுடைய மகளுக்கு வாங்கிக் கொடுத்த சைக்கிளின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளார். இந்த திருட்டு சம்பவம் ராமகிருஷ்ணன் வீட்டில் வைத்திருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளன. பின்னர் இச்சம்பவம் குறித்து ராமகிருஷ்ணன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு சைக்கிள் திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இது போன்ற திருட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இது போன்ற திருட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : May 22, 2019, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.