பிற மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் கடத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் உயரலுவலர் பிரசன்னா தலைமையில் ரெட்டிச்சாவடி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 18 பாலித்தீன் பைகளில் மொத்தம் 450 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஷேர் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுனரை விசாரணை செய்ததில் அவர் பில்லாளிதொட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்ராஜ் என்கின்ற சரண் என்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 450 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.