ETV Bharat / jagte-raho

வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை அபேஸ்! - 50 SOVERIGN GOLD STOLEN

வேலூர்: குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரின், வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை உடைத்து 50 சவரன் நகை அபேஸ்!
author img

By

Published : May 29, 2019, 8:03 AM IST

குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் வடிவேலு சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த வடிவேல், தனது தாய் முனியம்மாளையும் சிங்கப்பூர் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் முனியம்மாள் வசித்துவந்த வீடு பூட்டியே கிடந்துள்ளது. திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவரது மகள் மட்டும், அவ்வப்போது வந்து முனியம்மாளின் வீட்டைச் சுத்தம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முனியம்மாளின் மகள் வீட்டைச் சுத்தம் செய்வதற்காகச் சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்து சுமார் 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

பதறிப்போனவர் குடியாத்தம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற குடியாத்தம் நகரக் காவல் ஆய்வாளர் இருதயராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

வீட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முனியம்மாள் வீட்டில் இல்லாததை அறிந்து கொண்டு அவருக்கு நெருங்கிய சிலர்தான் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்தக் கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Intro:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

Body:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் வடிவேலு சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த வடிவேல் தனது தாய் முனியம்மாளையும் சிங்கப்பூர் அழைத்துச் சென்றுள்ளார் இதனால் முனியம்மாள் வசித்து வந்த வீடு பூட்டியே கிடந்துள்ளது திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவரது மகள் மட்டும் அவ்வப்போது வந்து முனியம்மாளின் வீட்டை சுத்தம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று முனியம்மாளின் மகள் வீட்டை சுத்தம் செய்வதற்காக சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து சுமார் 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது இதையடுத்து குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் இருதயராஜ் மற்றும் டிஎஸ்பி சச்சிதானந்தம் ஆகியோர் கொள்ளை சம்பவத்தை நேரில் சென்று விசாரணை நடத்தினர் தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன முனியம்மாள் வீட்டில் இல்லாததை அறிந்து கொண்டு அவருக்கு நெருங்கிய சிலர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அந்தக் கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் பூட்டிய வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.